அடுத்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு ஸ்ரேயாஸ் ஐயரால் எந்தவித கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என மருத்துவர்கள் கூறியதால், ஐபிஎல் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆகியவற்றிலிருந்து விலகுகிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின்போது, ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகுப்பகுதியில் வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவர்களிடம் ஸ்கேன் செய்ய அழைத்துச் செல்லப்பட்டார். முதல் இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்யவில்லை. பின்னர் ஒருநாள் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகிக்கொண்டார். அவருக்